• Jul 25 2025

இந்த நிகழ்ச்சியும் முடிவிற்கு வருகின்றதா...? கவலையில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியைப் பொறுத்தவரையில் எப்போதுமே வித்தியாசமான நிகழ்ச்சிகளுக்கு சொந்தக்காரராக காணப்படுகிறது. இந்த சேனலின் பல நிகழ்ச்சிகளை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு களித்து வருகின்றனர். அதாவது வாரயிறுதிகளில் மட்டுமின்றி வார நாட்களிலும் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்த வண்ணம் தான் இருக்கின்றன. 


அவ்வாறாக ரசிகர்கள் பலரதும் மனங்களைக் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி தான் 'அண்டாகாகசம்'. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை பிரபல விஜய் டிவி தொகுப்பாளர் மாகாபா தொகுத்து வழங்கி வருகிறார்.

இவர் எப்போதும் போல தனக்கே உரிய நகைச்சுவையுடன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியானது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்ற நிலையில் தற்போது முடிவுக்கு வர உள்ளது. 


அந்தவகையில் இன்றைய தினம் இந்நிகழ்ச்சியினுடைய இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்தது. மேலும் இந்த இறுதிநாள் நிகழ்வில் குக்வித் கோமாளி பிரபலங்கள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனை ரசிகர்கள் பலரும் காண ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இருப்பினும் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வருகின்றமை பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement