• Jul 24 2025

நிறுத்தப்பட்டதா ? இல்லை நிறுத்திவிட்டார்களா ?... லியோ ஆடியோ லஞ்ச் தொடர்பில் பிரபல நடிகர் கருத்து...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது நேரு ஸ்டேடியத்தில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்றுவந்தநிலையில் தற்போது லியோ படத்தின் இசைவெளியீட்டு விழா ரத்தாகியுள்ளது.


லியோ இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்காக அதிக டிக்கெட்டுக்களை  ரசிகர்கள் கோரியிருந்த நிலையில், ஓவர் கிரவுட் ஆகி ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் பெரிய சிக்கல் ஆகிவிடும் என்பதால் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவையே ரத்து செய்யப் போவதாக தயாரிப்பு நிறுவனம் சொன்ன காரணத்தை ரசிகர்கள் கொஞ்சமும் ஏற்கவில்லை. 

  

அது தொடர்பாக நடிகர் எஸ். வி சேகர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்." லியோ ஆடியோ லஞ்ச் நிறுத்தப்பட்டு இருக்கா ?  இல்ல நிறுத்திட்டாங்களா? நிறைய வித்தியாசம் இருக்கு அவங்களே ஆடியோ லஞ்ச் நிறுத்திவிட்டம்  என்று சொல்லுறாங்க அப்ப எப்படி நிறுத்தப்பட்டது என்று சொல்ல முடியும். ஒரு விஷயம் விஜய் தன்னை அரசியல் வருவதற்க்கு தயார் படுத்திக்கொண்டு இருக்கிறார். அவரின் அனைத்து ரசிகர் மன்றத்தையும் ஒன்றிணைத்து ஒரு கட்சிக்கு என்ன தேவையோ அந்த வேலைகளை செய்கிறார்". என்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்தார். 


ஆகமொத்தத்தில் லியோ ஆடியோ லஞ்ச் நிறுத்தப்படவில்லை , படக்குழு நிறுவனமே  நிறுத்திவிட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். லியோ ஆடியோ லஞ்ச் நடைபெறாதது விஜய் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தையே தந்துள்ளது.


Advertisement

Advertisement