• Jul 25 2025

Biggboss-7 இல் அதிரடியாக களமிறங்கும் விஜய் பட நடிகர்... அடடே இவருமா..? இதை நாம எதிர்பார்க்கலயே.. வெளியான லேட்டஸ் தகவல்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-ஆவது சீசன் அக்டோபர் 1-ஆம் தேதி ஆரம்பமாக இருக்கிறது. அதில் போட்டியாளராக களமிறங்கவுள்ள பிரபலங்கள் யார் யார் என்கிற தகவல்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கிறது. 


அந்தவகையில் பல சின்னத்திரை பிரபலங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு  வர இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக விஜய் டிவி பிரபலங்கள் அதிகம் பேர் வர இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. இதனால் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது மற்றுமோர் தகவல் வெளியாகி இருக்கின்றது. வெள்ளித்திரையில் இருந்தும் ஒருவர் கலந்து கொள்கின்றார். அதாவது தலைவா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த விஜய் வர்மா என்பவரும் இந்த சீசனில் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.


அதுமட்டுமல்லாது பிக்பாஸ் சீசன் 5-இல் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட தாமரை செல்வியின் கணவர் பார்த்தசாரதியும் இந்த சீசனில் கலந்து கொள்ளவிருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் இது எந்தளவிற்கு உண்மையான தகவல் என்பது தெரியவில்லை. எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement