• Jul 26 2025

அந்த மாதிரி நடிக்க சொல்லி துன்புறுத்தினார்கள்... தயாரிப்பாளர்கள் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல பஞ்சாபி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சோனம் பஜ்வா. இவர் தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அந்தவகையில் 'கப்பல்' மற்றும் 'காட்டேரி' படங்களைக் குறிப்பிட முடியும். 

அதுமட்டுமல்லாது இவர் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இந்தி டைரக்டர்களும், படத் தயாரிப்பாளர்களும் தன்னை ஆபாசமாக நடிக்கும்படி தொல்லை கொடுத்ததாக நடிகை சோனம் பஜ்வா சமீபத்தில் இடம்பெற்ற பேட்டியில் புகார் ஒன்றினை அளித்துள்ளார். 


அதாவது அவர் கூறுகையில் "இந்தியில் பாலா, ஸ்ட்ரீட் டான்சர் 3 டி போன்ற படங்களில் நடித்த பிறகு எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து குவிந்தன. அத்தோடு முன்னணி கதாநாயகர்கள் படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடவும் என்னை அவர்கள் அழைத்தனர். 


ஆனால் அந்த சமயத்தில் தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் உதட்டோடு உதடு வைத்து முத்த காட்சிகளிலும், நெருக்கமான படுக்கை அறை காட்சிகளில் ஆபாசமாக நடிக்க வேண்டும் என்று என்னை மிகவும் கொடுமையாக துன்புறுத்தினர். இதனால் எனக்கு மிகவும் பயம் ஏற்பட்டது" என்றார்.


அதுமட்டுமல்லாது "பஞ்சாப் பட உலகில் எனக்கு நல்ல இமேஜ் இன்றுவரை இருக்கிறது. அதை கெடுத்துக்கொள்ள மனம் இல்லாமல் இந்தி படங்களில் நடிக்க வேண்டாம் என்று நானே விலகிவிட்டேன். இருப்பினும் பஞ்சாபில் அதிக சம்பளம் பெறும் நடிகை என்ற அந்தஸ்து எனக்கு இருக்கிறது'' எனவும் நடிகை சோனம் பஜ்வா அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இவரின் இந்தப் பேட்டியானது இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இறுக்கின்றது.

Advertisement

Advertisement