• Jul 26 2025

திருமண பந்தத்தில் இணையவுள்ள விஜய் டிவி தீனா- மணப் பெண் யார் தெரியுமா?- சூப்பர் சர்ப்ரைஸ்ஸாக இருக்கே

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் ஷோவான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறிமுகமானவர் தான் தீனா. இந்த நிகழ்ச்சியினைத் தொடர்ந்து விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.

இது தவிர இளம் நடிகர்களின் படங்களில் காமெடி வேடத்திலும் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருகிறார்.இது தவிர விஜய் டிவி KPY நிகழ்ச்சியின் துணை இயக்குநராகவும் இருந்து கடமையாற்றியவர் 


சமீபத்தில் தான் தன்னுடைய சொந்த ஊரில்... பிரமாண்டமான வீடு ஒன்றை கட்டிய தீனா. இன்று  திருமண உறவிலும் இணைய உள்ளார். இவருடைய திருமணம் அவரின் சொந்த ஊரான திருவாரூரில் நடைபெற உள்ளதாகவும், இதில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையை சேர்ந்த பலர் கலந்து கொள்வார்கள் என எதிரிபார்க்கப்படுகிறது.


மேலும் இவர் திருமணம் செய்து கொள்ள உள்ள பெண் குறித்து வெளியாகியுள்ள தகவலில், அவர் ஒரு கிராபிக் டிசைனர் என்றும், இது பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம் என்றும், கண்டிப்பாக லவ் மேரேஜ் இல்லை என்பதையும் பிரபல ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார். தீனாவின் திருமண தகவலை அறிந்த ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement