• Sep 09 2025

பிரபல நடிகை திடீர் உயிரிழப்பு... தாயின்றித் தவிக்கும் குழந்தைகள்... கவலையில் திரையுலகம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் ஆர்லீன் சோர்கின். இவர் வெள்ளித்திரையில் மட்டுமன்றி சின்னத்திரையிலும் ஒரு சில சீரியல்களில் நடித்து இருக்கிறார். அதுமட்டுமல்லாது உலக புகழ்பெற்ற ஹார்லி குயின் கதாபாத்திரத்துக்கு பல ஆண்டுகளாக குரல் வழியாக உயிர் கொடுத்து வந்தவரும் இவர் தான்.


அந்தவகையில் சமீபகாலமாக நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த 67வயதான ஆர்லீன் சோர்கின் அதற்காக தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் 2குழந்தைகளுக்கு தாயான இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


இவரின் இந்த திடீர் உயிரிழப்பானது திரை உலகையே உலுக்கி உள்ளது. இவரின் இறப்பிற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement