• Jul 25 2025

ஈழத்துச் சிறுமி கில்மிஷாவின் அடுத்த பாடல்... நடுவர்கள் கொடுத்த சூப்பர் கமெண்ட்... வீடியோ இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான் பாடல் நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது. அந்நிகழ்ச்சியை தொடர்ந்து கடந்த சில வருடங்களுக்கு முன் இதற்கு இணையாக ஜீ தமிழில் சரிகமப என்ற பாடல் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. 


இதில் பலரும் பங்கு கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து ‘சரிகமப’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் சிறுமி கில்மிஷாவும் தனது குரல்வளத்தை சிறப்பாக திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்.


இவருடைய குரலால் ஈர்க்கப்பட்ட பலர் கில்மிஷாவுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். இப்படியான நிலையில் இந்த வாரம் சரிகமபவில் Evergreen Hits Round நடைபெறுகின்றது. இதனால் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த பாடல்களைப் பாடி வருகின்றனர்.


அந்தவகையில் கில்மிஷாவும் "என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்.." என்ற பாடலைப் பாடுகின்றார். இதனைக் கேட்டதும் பாடகர் ஸ்ரீநிவாசன் "இது ஒரு கோல்டன் ஷாங் மட்டுமல்ல, பெர்போமான்ஸ்ம் தான்" எனக் கூறிப்புகழ்கின்றார். 


இது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement