• Jul 25 2025

பொது நிகழ்ச்சியில் ஸ்ருதிஹாசனுக்கு I Love You சொன்ன பிரபல இயக்குநர்- நடந்தது என்ன தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவரது மூத்த மகள் ஸ்ருதிஹாசன் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தமிழில் விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவருக்கு, தற்போது தமிழில் பட வாய்ப்பு இல்லாததால், தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்

குறிப்பாக தெலுங்கில் செம்ம பிசியாக நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். தற்போது சங்கராந்தி ஸ்பெஷலாக தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்துள்ள வீரசிம்ஹா ரெட்டி திரைப்படமும், சிரஞ்சீவி நடித்துள்ள வால்டர் வீரய்யா படமும் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த இரண்டு படங்களிலுமே ஸ்ருதிஹாசன் தான் ஹீரோயினாக நடித்துள்ளார். 

இதுதவிர பிரபாஸின் சலார் படத்திலும் நடித்து வருகிறார்இவர் நடிப்பில் தற்போது தெலுங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் தான் வீர சிம்ஹா ரெட்டி. இப்படத்தில் ஹீரோவாக பாலகிருஷ்ணா நடித்துள்ளார். கோபிசந்த் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இரு நாட்களுக்கு முன் வெளிவந்த இப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் ஸ்ருதி ஹாசன் குறித்து பேசிய இயக்குநர் கோபிசந்த், I Love You ஸ்ருதி ஹாசன் என்று கூறிவிட்டார்.


இதன்பின் மேடையில் பேசிய ஸ்ருதி ஹாசன், இயக்குனர் கோபிசந்த் எனக்கு ஒரு அண்ணன் மாதிரி என்று கூறிவிட அந்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.


Advertisement

Advertisement