• Jul 25 2025

கணவருடன் பண்டிகை Vibe -ல் ஹன்சிகா- வெளியாகிய லேட்டஸ்ட் போட்டோஸ்- இது இவருடைய தல பொங்கலாச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!

சக்கலக்க பூம் பூம் என்னும் சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமாகியவர் தான் ஹன்சிகா  மோத்வானி,இதனைத் தொடர்ந்து தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

பின்பு விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்திருக்கும் இவர் இதுவரை 50 படங்களில் நடித்திருக்கின்றார்.இவர் தன்னுடைய குடும்ப நண்பரான மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை , 2022-ஆம் ஆண்டு, டிசம்பர் மாத தொடக்கத்தில் திருமணம் செய்துகொண்டார்.


இந்நிலையில் ஹன்சிகா மோத்வானி தமது கணவருடன் போகிப் பண்டிகையை கொண்டாடியுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கிணங்க, போகி பண்டிகைக்கு பழைய எதிர்மறை எண்ணங்களையும், கவலைகளையும் தீயிட்டு பொசுக்குவது பலரது நம்பிக்கை. இதன் ஒரு அங்கமாக நெருப்பு குண்டத்தில் பழைய பொருட்களை போட்டு எரிப்பார்கள் சிலர். சிலர் வெறும் விறகு குச்சிகளை மட்டும் தீயிலிட்டு பொசுக்கி, முந்தைய வருட எதிர்மறை எண்ணங்கள், கவலை தந்த விஷயங்களை மறந்து பாசிடிவாக Vibe ஆவார்கள்.


அவ்வகையில் அக்னிகுண்டத்தின் முன்பாக நடிகை ஹன்சிகா மோத்வாணி, தமது கணவருடன் நெருப்பு குண்டத்தின் முன்பாக மகிழ்ச்சியுடன் நின்றுகொண்டிருக்கும் ஃபோட்டோ வைரலாகி வருகிறது.திருமணத்துக்கு பின்னராக ஹன்சிகாவின் முதல் பொங்கல், அதாவது தலை பொங்கல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement