• Jul 26 2025

தங்கியிருந்த வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பிரபல சீரியல் நடிகர்- அதிர்ச்சியில் திரையுலகம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் சமீபகாலமாக மர்மமான முறையில்  இறந்து வருவது ரசிகர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் தற்பொழுது பிரபல பாலிவூட் சீரியல் நடிகர் ஒருவர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அதாவது மும்பை அந்தேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தான் ஆதித்யா சிங் ராஜ்புத். இவர் தனது குடியிருப்பிலிருந்து இன்று  மீட்கப்பட்டுள்ளார்.


 இவரது உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இவர் இறந்ததற்கான காரணம் மட்டும் என்ன என்பது இன்னும் தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement