• Jul 26 2025

என்னுடைய கனவுத் திருமணம் நினைவேறிடுச்சு- திருமணம் முடிந்த கையுடன் தீபிகா வெளியிட்ட வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் மிகவும் பேமஸ் ஆனது. ஆரம்பத்தில் பள்ளிப்பருவத்தை மையமாக வைத்து கனா காணும் காலங்கள் நடத்தப்பட்டு வந்தது. இதையடுத்து அதே பெயரில் கல்லூரி பருவ நட்பை மையமாக வைத்து கனா காணும் காலங்கள் சீரியலை நடத்தினர். இந்த இரண்டுக்குமே நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, அதில் நடித்த நடிகர், நடிகைகள் இன்று சின்னத்திரை சீரியல்களில் முன்னணி ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில், கனா காணும் காலங்கள் தொடரின் புதிய சீசன் ஓடிடியில் ஒளிபரப்பாகி வந்தது. பள்ளிப்பருவத்தை மையமாக வைத்து உருவான இந்த தொடரின் முதல் சீசன் வெற்றியடைந்ததை அடுத்து, தற்போது அதன் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த இரண்டு சீசனிலும் நடித்த நடிகர், நடிகைகளும் இன்ஸ்டாகிராம் மூலம் படு பேமஸ் ஆகிவிட்டனர்.


அப்படி கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் பேமஸ் ஆனவர்கள் தான் தீபிகா மற்றும் ராஜா வெற்றி பிரபு. இதில் தீபிகா அபி என்கிற கேரக்டரிலும், ராஜா வெற்றி பிரபு கெளதம் என்கிற கேரக்டரிலும் நடித்திருந்தார். இவர்கள் இருவரும் தான் தற்போது குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இவர்களது திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இந்த நிலையில் திருமணம் முடிந்தவுடனேயே தீபிகா ஓர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் நீண்ட நாள் என்னுடைய கனவுத் திருமணம் நடைபெற்று விட்டது . எனக்கு சர்ப்போட் செய்த அனைவருக்கு நன்றி ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement