• Jul 25 2025

டிராக்டர் மோதி பரிதாபமாக உயிரிழந்த பிரபல சீரியல் நடிகை- அதிர்ச்சியில் திரையுலகம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கோலாப்பூர் நகரில் உள்ள ராஜாராம்புரி பகுதியைச் சேர்ந்தவர் தான் நடிகை கல்யாணி ஜாதவ், இவர் துஜ்யத் ஜீவ் ரங்களா மற்றும் தக்கஞ்சா ராஜா ஜோதிபா போன்ற மராத்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

இவர் தனது  உணவகத்தை மூடிவிட்டு  வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதியது. இதன் காரணமாக அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 


கோலாப்பூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட ஷிரோலி எம்ஐடிசி காவல் நிலைய அதிகாரிகள் அளித்த தகவலின்படி, கோலாப்பூர் நகரத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், புனே நகரிலிருந்து 230 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள ஹலோண்டி கிராமத்தில் இரவு 11 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.

இந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் மராத்தி திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் முக்கியமாகும்.


மேலும் விபத்துக்கு சிலமணி நேரம் முன்பு கூட தனது உணவகத்தில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கல்யாணி பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement