• Jul 25 2025

ஓவராக ஆட்டம்போட்ட தனலட்சுமிக்கு ஒரே அடியாக ஆப்பு வைத்த கமல்ஹாசன்- நடந்தது என்ன?

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுக்க பேக்கரி டாஸ்க் நடத்தப்பட்டது. அதில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து உருவாக்கிய ஸ்வீட்டுகள் அனைத்தும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன. பொதுவாக பிக்பாஸ் வீட்டில் டாஸ்க் வைத்தாலே அது சண்டையில்லாமல் முடியாது.

அந்த வகையில் நேற்றைய தின எப்பிஷோட்டில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.  அதாவது முதலாவது கேம் நடந்தது. அதில் இந்த வாரம் நாமினேஷனில் இல்லை என்றாலும், ஹவுஸ்மேட்களின் அன்பான க்ரீன் ஸ்டாம்ப்புகளையும் ரசிகர்களின் ஆதரவையும் அதிகமாகவே ஷிவின் பெற்று சூப்பராக விளையாடி வருகிறார். அதே போல ரெட் ஸ்டாம்ப்புகளை அதிகமாக அசீம் பெற்றார்.


. குறிப்பாக கண்ணா லட்டு திண்ண ஆசையா என்கிற அணியின் தலைவராக இருந்த தனலட்சுமி, கடந்த வாரம் நடந்த பெரும்பாலான சண்டைகளுக்கு காரணமாக இருந்தார். அதுமட்டுமின்றி அவர் விதிகளை மீறி விளையாடி தான் இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றார்.

தனலட்சுமி பேக்கரி டாஸ்க்கில் செய்த விதிமீறல்களை குறும்படமாக போட்டு காட்டிய கமல்ஹாசன், அவர் இந்த போட்டியில் வெற்றிபெற்றது செல்லாது என அறிவித்து அடுத்த வார நாமினேஷன் ஃப்ரீ சோனில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு விக்ரமன் வெற்றிபெற்றதாக அறிவித்தார்.


அத்தோடு போட்டியாளர்கள் மூலம் மக்களையும் நேர்மையோடு வாழும்படி கூறினார்.தொடர்ந்து மகேஷ்வரி எலிமினேட் ஆகி வெளியேறினார். அவருக்கான குறும்படம் போட்டுக் காட்டியவுடன் அவர் மேடையில் இருந்து  விடைபெற்று வெளியேறினார்.இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைந்தது.


Advertisement

Advertisement