• Jul 25 2025

மூச்சுத் திணறலால் பிரபல மூத்த நடிகர் திடீர் மரணம்- பாலிவூட்டில் தொடரும் சோகம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த வாரம் பாலிவூட் நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான சதீஷ் கௌசிக் மாரடைப்பால் உயிரிழந்தார். வீட்டில் இருந்த சதீஷ் கௌசிக்கிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து காரில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது.

இவரை அடுத்து பாலிவூட்டில் மூத்த நடிகரான  சமீர் காகர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இன்று உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. இவர் டந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மூச்சு திறணல் காரணமாக மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார்.


இந்த தகவலை அவரது சகோதரர் கணேஷ் காகர் உறுதிப்படுத்தி உள்ளார். நடிகர் சமீர் காகர் ஏற்கனவே சிறிநீரக பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார். நேற்று மதியம் அவருக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டு, சுயநினைவை இழந்தார்.உடனே நாங்கள் மருத்துவர்களை அழைத்தோம், அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கும்படி கூறினார். 

இதையடுத்து, போரிவலி எம்.எம் மருத்துவமனையில் அனுமதித்தோம் அவருக்கு, வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இருந்த போதும், சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை 4:30 மணி அளவில் உயிரிழந்தார் என்றார்.அவரின் இறுதிச்சடங்கு நடிகர் சமீர் காகர் இல்லத்தில் நடைபெறும் என்றும், பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பலில் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு பாபாய் நாகா மயானத்தில் தகனம் செய்யப்படும் என்று, அவரது சகோதரர் கூறினார். 


ரசிகர்களால், கோப்டியா என்று செல்லமாக அழைக்கப்படும் பழம்பெரும் நடிகர் சமீர் காகர் உயிரிழந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement