• Jul 24 2025

1000கோடியைத் தாண்டி அசத்திய 'பதான்'.. இதுவரை செய்த மொத்த வசூல்.. கொண்டாட்டத்தில் படக்குழு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ஷாருக்கான் நடித்துள்ள பதான் திரைப்படம் ஆனது ஜனவரி 25-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது. பான் இந்திய படமாக ரிலீஸான பதானில், ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம் ஆகியோருடன் சல்மான் கான் கேமியோ ரோலில் நடித்திருந்தனர்.


இப்படமானது வெளியாவதற்கு முன்னர் பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தமை நம் அனைவருக்கும் தெரியும். அதாவது காவி நிற பிகினி உடை சர்ச்சையைத் தொடர்ந்து இந்து அமைப்புகள் பதான் படத்துக்கு எதிராக பாய்காட் பிரசாரத்தை ஆரம்பித்தனர். 


இதனால் பதான் திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், எதிர்பார்த்ததை விட ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வெளியான முதல் நாளிலிருந்து இப்படம் அமோக வசூலினையும் பெற்றிருந்தது. 


அந்தவகையில் இப்படம் வெளியாகி 2மாதங்களை கடக்கவுள்ள நிலையில், இதுவரை உலகம் முழுவதும் பதான் படம் ரூ.1060 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது படக்குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement