• Jul 25 2025

ருத்ரன் பட விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் செய்த நெகிழ்ச்சிச் செயல்- அடடே இத்தனை பிள்ளைகளா?- பாராட்டுத் தெரிவிக்கும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த ருத்ரன் திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்து இயக்கியுள்ளார். விறுவிறுப்பான ஆக்ஷன் அதிரடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

 வில்லனாக நடிகர் சரத்குமார் நடித்துள்ளார். மேலும் இதில், நாசர், பூர்ணிமா, இளவரசு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகியுள்ளது.


 இந்த படத்திற்கு இயக்குநர் கே.பி.திருமாறன் கதை, திரைக்கதை எழுதியுள்ளார். இந்த படத்திகு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் பிரமாண்டமாக நடைபெற்றது.


அந்த விழாவில் கலந்து கொண்ட இப்படத்தின் நாயகனான ராகவா லாரன்ஸ் 150 குழந்தைகளைத் தத்தெடுத்து அவர்களின் கல்விச் செலவுகளை தானெ ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இவரின் சேவையை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement