• Jul 25 2025

சகுந்தலம் திரைப்படம் மோசமாக அமைந்துள்ளதா?- படத்திலிருந்து வெளியாகிய விமர்சனம்- வெளியான அப்டேட்!

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தாவின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களிலும் பாவிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் . இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் தான் சகுந்தலம். இப்படமானது வரும் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ளது.

பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள நிலையில், கேரளா, ஆந்திரா, மும்பை என அடுத்தடுத்த இடங்களில் தன்னுடைய ப்ரமோஷனை சிறப்பாக நடத்தி முடித்துள்ளார் சமந்தா. படம் ரிலீசாவதற்கு இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில், படத்தின் பிரீமியர் ஷோ நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.


 இந்தப் படத்தை இயக்கியுள்ள குணசேகர், இதுபோன்ற முயற்சிகளை விட்டுவிட்டு, கமர்ஷியல் படங்களில் கவனம் செலுத்தினால் நல்லது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. படம் 5ற்கு 2 மார்க் மட்டுமே வாங்கியுள்ளது. படத்தின் பர்ஸ்ட் ஆஃப்பிலாவது ஒரு சில காட்சிகள் பார்க்கும்படி அமைந்துள்ளதாகவும் இரண்டாவது பாதியில் பயங்கர சொதப்பல் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இந்தப் படத்தில் அர்ஹாவின் நடிப்பு மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் விஎப்எக்ஸ் மற்றும் திரைக்கதை மிகவும் மோசமாக அமைந்துள்ளதாகவும் விமர்சனங்கள் கூறப்பட்டுள்ளன.


சமந்தாவின் நடிப்பில் சகுந்தலம் இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ள நிலையில், அடுத்தடுத்த படங்களில் சமந்தா ரொம்பவே பிசியாக இருக்கின்றார். அவரது நோய் பாதிப்பிலிருந்து அவர் ஓரளவிற்கு மீண்டுள்ள நிலையில், விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்துள்ள குஷி படம் வரும் செப்டம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எத்தனை பிரச்சினைகள், சவால்கள் வந்தாலும் அதையெல்லாம் எதிர்கொண்டுவரும் சமந்தாவிற்கு வெற்றித் தோல்விகள் அதிகமான பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement