• Jul 24 2025

துணிவு பட வெற்றியால் இயக்குநர் H.வினோத் அப்பாவுக்கு கிடைத்த மரியாதை- கொண்டாடி வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

போனி கபூர் தயாரிப்பில், இயக்குநர் H. வினோத் இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா இசையில்,  அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அதே கூட்டணி வலிமை படத்தில் இணைந்தது.

வலிமை படம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் (24.02.2022) திரையரங்கில் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து வெற்றி அடைந்தது .


நேர்கொண்ட பார்வை & வலிமை படங்களுக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணைந்த படம் துணிவுவங்கிகள் மற்றும் பங்கு சந்தை தொடர்பான  'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023)  அன்று  திரையரங்குகளில் வெளியானது. 

இதுவரை தமிழகத்தில் ரூ. 112 கோடி வரை வசூல் செய்துள்ள இப்படம் அஜித்தின் திரை வாழ்க்கையில் இதுவரை கண்டிராத பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.உலகளவில் ரூ. 200 கோடியை துணிவு படம் கடந்துவிட்டதாகவும் அண்மையில் தெரியவந்தது.


இந்நிலையில், துணிவு படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குநர் எச். வினோத்தின் அப்பாவை திரையரங்கிற்கு அழைத்து மரியாதை செய்துள்ளனர்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்து, இது தான் உண்மையான வெற்றி என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Advertisement

Advertisement