• Aug 25 2025

அவ என்னைக் கொண்டிடுவா... ரவீந்தர் போட்ட திடீர்ப் பதிவு... குழம்பிப் போயுள்ள ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரைப் பிரபலங்களின் உடைய திருமண வரிசையில் அதிகளவில் பேசப்பட்ட திருமணம் என்றால் அது ரவீந்தர்-மகாலட்சுமி தம்பதிகளின் திருமணம் தான். இதில் சின்னத்திரை சீரியல் நடிகையாக இருந்து ரசிகர்கள் பலரின் கவனத்தை ஈர்த்து வந்தவர் தான் மகாலட்சுமி. 


இவரை கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி தயாரிப்பாளர் ரவீந்தரை 2 ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்தார். ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் மகாலட்சுமி விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வந்தார்.


அதன்பின் இரண்டாம் திருமணத்தை ரவீந்தருடன் முடித்து பின்னர் அது பல வகையிலும் சர்ச்சைக்குள்ளானது. இருப்பினும் அத்தகைய விமர்சனங்களை கண்டுக்கொள்ளாத ரவீந்தர் - மகாலட்சுமி ஜோடி தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர்.

அது மட்டுமல்லாது ரவீந்தர் உடல் எடையை குறைக்க மகாலட்சுமி கூறியதால் தினமும் வேகவைத்த முட்டை மட்டுமே சாப்பிட்டு வருவதாக கூறி புகைப்படத்தோடு சமீபத்தில் ஒரு பதிவினை போட்டுள்ளார். 


இந்நிலையில் இவர் தற்போது மற்றுமோர் பதிவினையும் பகிர்ந்திருக்கின்றார். அதாவது நாய்க் குட்டியுடன் பெட்டில் படுத்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து "நான் வாட்டர்பேட் இல்லை "மைலோ" ..அவ பார்த்தா கொன்னுடுவா..நீ இல்லை ..என்னை கொண்டுருவா" எனக் கிண்டலாகப் பதிவிட்டுள்ளனர். 

இருப்பினும் ரவீந்தர் தனியாக இருக்கும் இப்புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் மகாலட்சுமி எங்கே எனக் கேட்டு குழம்பிப் போயுள்ளனர்.


Advertisement

Advertisement