• Jul 24 2025

கோர்த்துவிட்ட கமல்... அமுதவாணன், ஜனனியை ராக்கெற் செய்யும் போட்டியாளர்கள்... வெளியானது ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில், சீசன் 6ஆனது தற்போது களை கட்டி வருகின்றது. அத்தோடு இந்நிகழ்ச்சியானது தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. அதற்கான முக்கிய காரணம் போட்டியாளர்களிடையே இடம்பெறுகின்ற சலசலப்புக்களும், முகச்சுளிப்புக்களும் தான்.

அந்தவகையில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களது உண்மை முகத்தைக் காட்டத் தொடங்கி உள்ளார்கள். அமைதியாக இருந்தவர்கள் கூட ஆண்பாம்பு போன்று சீறிப் பாயத் தொடங்கி விட்டார்கள். அதிலும் குறிப்பாக கமலின் எபிசோட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள் கூட்டமோ ஏராளம். 


இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் கமல் "யார் வில்லாளி, யார் எய்யப்பட்ட அம்பு" எனக் கேட்கின்றார். அதற்கு உடனே ஷிவின் எழுந்து "வில்லாக அமுதாவையும் அம்பாக ஜனனியையும் பார்க்கிறேன்" எனக் கூறுகின்றார்.

அதேபோன்று ரச்சிதா, adk உட்பட ஏராளமான போட்டியாளர்கள் ஜனனியையும், அமுதவாணனையுமே ராக்கெற் பண்ணி கூறுகின்றனர். அதுமட்டுமல்லாது ஜனனி எழுந்து adk மற்றும் விக்ரமனை கூறுகின்றார். இதனை அவதானித்த கமல் நிறைய அம்பு வாங்கி இருக்கீங்க உங்களுக்கு தெரியும் தானே எனக் கூறுகின்றார்.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement