• Jul 25 2025

தேவா இசையில் உருவாகும் நகைச்சுவைப் படம்... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களை ஒருகாலத்தில் தனது இசையின் மூலம் கட்டிப்போட்டு வைத்தவர் இசையமைப்பாளர் தேவா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்கள் என 400இற்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.


இந்நிலையில் தற்போது இவரின் இசையில் 'வா வரலாம் வா' என்ற புதிய படம் தயராகிறது. இதில் கதாநாயகனாக 'கொன்றால் பாவம், இரும்பு மனிதன், கதை திரைக்கதை வசனம், பயமா இருக்கு, நான் அவளை சந்தித்தபோது' உள்ளிட்ட படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப் நடிக்கிறார். 

மேலும் இதில் நாயகியாக பவ்யா நடிக்கிறார். அதுமட்டுமல்லாது நகைச்சுவை வேடத்தில் கிங்ஸ்லி, வில்லனாக மைம் கோபி மற்றும் சிங்கம் புலி, சரவணன் சுப்பையா, தீபா, வையாபுரி, பயில்வான் ரங்கநாதன், போண்டாமணி, பிரபாகரன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 


அந்தவகையில் இந்தப் படத்தை எ.ஜி.ரவிசந்தர், எஸ்.பி.ஆர் ஆகியோர் இணைந்து டைரக்டு செய்கிறார்கள். மேலும் பணத்துக்காக ஆசைப்பட்டு பள்ளிக் குழந்தைகளை கடத்திய நாயகனும், அவனது நண்பனும் அதில் வெற்றி பெற்று பணக்காரர்கள் ஆனார்களா? என்பதை நகைச்சுவையாக படமாக்கி உள்ளனர். 

இவ்வாறான ஒரு நகைச்சுவை கதையம்சம் கொண்ட படங்களுக்கு தேவா இசையமைக்கின்றமை ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது.

Advertisement

Advertisement