• Jul 23 2025

ராஷ்மிகா, திரிஷாவை அந்த விஷயத்தில் ஓரங்கட்டிய மிருனாள் தாகூர்..! ஓஹோ..சம்பவம் இது தானா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சீதா ராமம் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் தற்போது சென்சேஷன் நடிகைகளில் ஒருவராக மாறியிருப்பவர் நடிகை மிருனாள் தாகூர். இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பான சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.

மேலும் இன்று பாலிவுட்டில் வெளிவந்துள்ள கும்ராக் எனும் திரைப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துகிறார். இப்படம் தமிழ் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த தடம் படத்தின் ஹிந்தி ரீமேக் ஆகும்.தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகை மிருனாள் தாகூர் அடுத்ததாக தெலுங்கில் உருவாகி வரும் நானி 30 படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது.

இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை மிருனாள் தாகூர் ரூ. 6 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம்.

தென்னிந்திய திரையுலகில் மிருனாள் தாகூருக்கு முன் முன்னணி நடிகைகளாக இருக்கும் ராஷ்மிகா, திரிஷாவை விட மிருனாள் தாகூர் வாங்கியுள்ள சம்பளம் அதிகம் என்று கூறப்படுகிறது.நானி 30 படம் மட்டுமின்றி ஹிந்தியில் இன்னும் சில திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுமட்டுமின்றி சூர்யாவின் 42வது படத்திலும் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக மிருனாள் நடித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

ஒரே ஒரு சீதா ராமம் படத்தின் மூலம் தற்போது இந்தியளவில் அதிகம் வரவேற்பை பெற்ற நாயகியாக மாறியுள்ளார் மிருனாள் தாகூர் என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement