• Jul 25 2025

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் முக்கிய போட்டியாளர்... சோகத்தில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு வார இறுதியிலும் போட்டியாளர்கள் வெளியேறி வருவது வழமை. அந்தவகையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஏடிகே அல்லது மணிகண்டன் இருவரில் ஒருவர் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேர ட்விஸ்ட்டாக யாருமே எதிர்பார்க்காத வகையில் ஜனனியை கமல் எவிக்ட் செய்திருந்தார். 


மேலும் இந்த வாரம் மணிகண்டன் மற்றும் ஏடிகே இருவரில் ஒருவர் நாமினேஷனுக்கு வந்தால் அவர்கள் நிச்சயம் வெளியேறிவிடுவார்கள் என்று தெரிந்தே இருவரையும் பிக்பாஸ் வீட்டில் சேவ் செய்து விட்டனர் என கமெண்ட்டுகள் குவிகின்றன. அதாவது ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன் இந்த வாரமும் எஸ்கேப் ஆகி உள்ளார். ஏடிகேவை யாருமே நாமினேட் செய்யவில்லை.


இந்நிலையில் வழக்கம் போல இந்த வாரமும் அசீம், விக்ரமன், தனலட்சுமி உள்ளிட்ட ஆல்டைம் நாமினீஸ் நாமினேட் ஆகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு ரச்சிதா, மைனா நந்தினி, கதிரவன் உடன் முதல் முறையாக ஷிவின் நாமினேட் ஆகி உள்ளார். இந்த 7 பேரில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற போகிறார் என்பது தான் ரசிகர்களின் ஒரே கேள்வியாக எழுந்துள்ளது.


இந்நிலையில், இவர்களில் ஷிவின் மற்றும் ரச்சிதா குறைந்த வாக்குகளுடன் உள்ளார்கள் எனவும், ஆனால் நிஜத்தில் தனலட்சுமி தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவதாகவும் தற்போது ஒரு தகவல் வலம் வருகிறது. 

Advertisement

Advertisement