• Jul 25 2025

திணறும் நயன்தாரா.. கனெக்ட் படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவு தானா..? வெளியானது முழுமையான விபரம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய படங்கள் எதுவும் போகாத நிலையில் அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் கனெக்ட் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. கிட்டத்தட்ட 99 நிமிடங்கள் மட்டுமே எடுக்கப்பட்ட இந்த படத்தை இடைவெளி இன்றி வெளியிட படக்குழு கோரிக்கை வைத்து இருந்தது.

ஆனால் தியேட்டர் உரிமையாளர்கள் இதற்கு சம்மதிக்காததால் இடைவெளியுடன் இப்படம் வெளியானது. ஹாரர் படமாக எடுக்கப்பட்ட இந்த படத்தை அஸ்வின் சரவணன் இயக்கியிருந்தார். அத்தோடு இந்த படத்தில் நயன்தாரா கணவனை இழந்த மகளைக் காப்பாற்றும் அம்மாவாக நடித்திருந்தார்.

எப்போதுமே படத்தின் பிரமோஷனில் கலந்து கொள்ளாத நயன்தாரா கனெக்ட் படத்திற்கு மட்டும் பிரமோஷன் செய்திருந்தார். எனினும் அதுமட்டுமின்றி சில ஊடகத்திற்கும் பேட்டி கொடுத்திருந்தார். இதற்கு காரணம் கனெக்ட் படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்திருந்தது.

ஆகையால் தான் கனெக்ட் படத்திற்கு தீயாய் நயன்தாரா ப்ரோமோஷன் செய்திருந்தார். ஆனால் இப்போது போட்ட காசை எடுக்க முடியாமல் நயன்தாரா திணறி வருகிறார். காரணம் கனெக்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை தான் பெற்று வருகின்றது.

அத்தோடு  எப்போதும் வெளியாகும் திகில் படம் போன்ற கதையை தான் கனெக்ட் படமும் கொண்டுள்ளது. புதுவிதம் முயற்சியாக கதையில் சில மாற்றங்கள் செய்திருந்தால் படம் மாபெரும் வெற்றி பெற்று இருக்கும். அதுமட்டுமின்றி கிளைமாக்ஸ் காட்சிகளிலும் இயக்குநர் சொதப்பிவிட்டார்.

எனவே கனெக்ட் படம் முதல் நாளில் 1.5 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. அத்தோடு அடுத்த அடுத்த நாட்களில் இன்னும் வசூல் பாதிக்கும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரும் நஷ்டத்தை நயன்தாராவின் கனெக்ட் படம் கொடுத்துள்ளது.


Advertisement

Advertisement