• Jul 24 2025

'பசங்க' பட ஸ்ரீராமிற்கு இத்தனை வயசா...? அவரே பகிர்ந்த உண்மை... ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

‘பசங்க’, ‘கோலி சோடா’ போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீராம். இப்படங்களின் மூலமாக கிடைத்த பேர், மற்றும் புகழினைத் தொடர்ந்து இன்றுவரை பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் ஸ்ரீராம் பல விடயங்களை பகிர்ந்திருக்கின்றார். அதாவது "ஒரு சிலர் அது நீங்க தானா என்பது போல் சிலர் நம்மள பாப்பாங்க, ஏனெனில் நம்ம கெட்டப் மாறி இருக்கும், நாம சின்ன வயசில இருந்து வளர்ந்திட்டு வாறோம், உருவம் வேற மாறிட்டு இருப்போம். அதனால் ஒரு படத்தின் ரிலீஸ் அப்போ மக்கள் மனசில் நாம பதிஞ்சிடுவோம், அதனால் எங்க போனாலும் கண்டு பிடிச்சிடுவாங்க.


நான் என்னோட வயசை சொன்னால் கூடி எல்லோருமே ஷாக் ஆகிடுவாங்க. என் நிஜ வயசு இப்போ 27, இதை சொன்னால் யாருமே நம்ப மாட்டாங்க" என்றார்.

மேலும் "சினிமா தான் என்னோட இதயம், படம் ரிலீஸ் ஆகும் போது நான் எல்லாம் தியேட்டர் விட்டு வெளியே வரும்போது மக்கள் என்னை அப்படியே தூக்குவாங்க, நம்மள எல்லாம் இப்படி பாக்கிற மக்களுக்காக நாம் என்ன செய்திருக்கிறோம் என்ற கேள்வி எனக்குள் எப்பவும் இருந்திருக்கின்றது" எனவும் கூறியுள்ளார் ஸ்ரீராம்.


எது எவ்வாறாயினும் சிறுவன் போல் தோற்றமளித்து படங்களில் நடித்து வந்த ஸ்ரீராமிற்கு தற்போது 27வயசு ஆகிவிட்டது என்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்துள்ளது.

Advertisement

Advertisement