• Jul 23 2025

அவரே சொல்லல... நான் எப்படி சொல்லுறது... விஜய்யின் அரசியல் பயணம் குறித்து சத்யராஜ் அளித்த பதில்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

என்னதான் ஒருபுறம் நடிப்பில் பிஸியாக இருந்தாலும், மறுபுறம் நடிகர் விஜய்  தனது அரசியல் ஆசையையும் வளர்த்து வருகிறார். அந்தவகையில் சமீபகாலமாக அவரின் மக்கள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயல்பாடுகள் கூடிய விரைவில் விஜய் அரசியலில் கால் பதிப்பதற்கான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. 

அதிலும் குறிப்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்  தொகுதி வாரியாக முதல் 3 இடங்கள் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி இருந்த விஷயமானது இந்திய அளவில் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதுவே அவரின் அரசியல் பயணத்துக்கான தொடக்கப்புள்ளியாக பலராலும் பார்க்கப்படுகிறது,. 


இந்நிலையில் கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உடுமலை கெளசல்யா சங்கரின் 'ழ' என்ற அழகு நிலையத்தை நடிகர் சத்யராஜ் இன்றைய தினம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் சத்யராஜ் செய்தியாளர்களுக்குப் பேட்டி ஒன்றினையும் வழங்கி இருந்தார். 


அதில் நடிகர் விஜய் அரசியல் பிரவேசத்திற்காக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினாரா என செய்தியாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்கு, "விஜய் செய்தது நல்ல விஷயம். அவர் அரசியலுக்கு வருவது பற்றி எனக்கு தெரியாது. அவரே சொல்லாத போது நான் எப்படி சொல்ல முடியும்? விஜய் பெரியார், அம்பேத்கர், காமராஜர் முன்னுதரணமாக வைத்து அவர் பேசியது ரொம்ப நல்ல விஷயம். இளைய தலைமுறைக்கு அவர் பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார். அவரே இதை சொன்னதை வரவேற்கிறோம்" எனப் பதிலளித்தார்.

Advertisement

Advertisement