• Jul 24 2025

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஹன்ஷிகா.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. வெளியானது வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று 'குக் வித் கோமாளி'. இந்த நிகழ்ச்சியானது இதுவரை மூன்று சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்த மூன்று சீசன்களின் அமோக வெற்றிக்கு பின்னர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஆனது ஆரம்பமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


மேலும் குக் வித் கோமாளி சீசன் 4 தொடங்கியதில் இருந்து பல திரைப்பிரபலங்களும் விருந்தினராக நிகழ்ச்சிக்கு வருகை தந்த வண்ணமே இருக்கின்றனர். அந்தவகையில் முதலில் ஆர்.ஜே. பாலாஜி வந்திருந்தார். அதனைத் தொடர்ந்து கவின் உள்ளிட்டோர் தங்களுடைய படத்தின் ப்ரோமோஷனுக்காக இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.


இந்நிலையில், இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகை ஹன்சிகா சிறப்பு விருந்தினராக வருகை தந்து சிறப்பிக்கவுள்ளார். மேலும் ஹன்சிகாவிற்கு சமீபத்தில் தான் சோஹைல் கதூரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதனால் இந்த நிகழ்ச்சிக்கு வரும் ஹன்ஷிகாவைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றார்கள்.


இது குறித்த Promo வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement