• Jul 25 2025

விஜய் கண்மூடித்தனமாக நம்பும் இரண்டு பிரபலங்கள்- இவ்வளவு நாள் தெரியாமல் போச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இவர்கள் கூட்டணி இரண்டாவது முறையாக இணைவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்தில்  கதாநாயகியாக த்ரிஷா நடித்து வருகின்றார்.

இப்படியான நிலையில் தளபதி குறித்து ஒரு விடயம் வைரலாகி வருகின்றது.அதாவது பொதுவாக பிரபலங்கள் யாரும் யாரையும் எளிதில் நம்பி விடமாட்டார்கள். அப்படி இருக்கையில் விஜய் இரண்டு பேரை கண்மூடித்தனமாக நம்புகிறார் என்று கூறப்படுகின்றது.ஒருவர் லலித்.இவர் விஜய்யின் பினாமியாக கூட இருப்பார்.


தற்போது  விஜய் நடிக்கும் லியோ படத்தை மறைமுகமாக விஜய் தயாரிக்கவும் செய்கிறார் என்று கூறுகின்றனர். அதற்கு பினாமியாக லலித் தான் முழு வேலையும் செய்து வருகிறார். இவரை விஜய் இன்று வரை முழுமையாக நம்புகிறார்.அதுமட்டுமில்லாமல் விஜய்யின் அனைத்து சொத்துக்களையும் பராமரிக்கும் பொறுப்பில் லலித் இருக்கிறார். அத்துடன் விஜய்யின் கல்யாண மண்டபத்தை அவர்தான் எடுத்து நடத்துகிறார். அதனைத் தொடர்ந்து விஜய்க்கு பல சொத்துகளை அவர்தான் வாங்கிக் கொடுத்திருக்கிறார். இதனால் அவருக்கு தேவையான ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து பூர்த்தி செய்து வருகிறார்.


இதுபோக இப்பொழுது விஜய்யின் மேனேஜராக செயல்படும் ஜெகதீசையும் விஜய் முழுமையாக நம்புகிறாராம். இவர்கள் இரண்டு பேரும் தான் விஜய்க்கு இரண்டு கண்களாக இருந்து வருகிறார்களாம். சில வருடங்களுக்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் இருந்தார்.அந்தப் படத்தின் போது விஜய்க்கும், ஜெகதீஷ்க்கும் இடையில் பெரிய பஞ்சாயத்து ஏற்பட்டதாகவும் அதனை தொடர்ந்து விஜய், ஜெகதீசையை நீக்கி விட்டதாகவும் தகவல் வெளியானது. மேலும் இவர் விஜய்க்கு மட்டுமில்லாமல் மற்ற சில நடிகர்களுக்கும் மேனேஜராக இருப்பதால் விஜய்க்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.


இந்நிலையில் மறுபடியும் விஜய், ஜெகதீஸை கண்மூடித்தனமாக நம்புகிறார். இப்பொழுது விஜய்யை, அவர்கள் இரண்டு பேரும் இமைகாக்கும் கண்களைப் போல பார்த்து வருகிறார்கள். இவர்கள் இரண்டு பேரும் விஜய்யின் செல்லப் பிள்ளைகள் என்றே கூட சொல்லலாம். அந்த அளவிற்கு விஜய் கூட நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement