• Jul 25 2025

மோசமான நிலையில்... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகர்.. சோகத்தில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ஹாலிவுட் திரையுலகில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் ஜெரமி ரெனர். இருப்பினும் இவர் 'மார்வெல் அவெஞ்சர்ஸ்' படங்களில் நடித்ததன் மூலமே உலகம் பூராகவும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.


இந்நிலையில் தற்போது நடிகர் ஜெரமி ரெனர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதாவது பனி விபத்தில் சிக்கிய நடிகர் ஜெரமி ரெனர் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.


இதனைத் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வரும் ஜெரமி ரெனர் மோசமான நிலையில் இருந்தாலும் தற்போது ஓரளவு பரவாயில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாது விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் எனவும் ரசிகர்கள் பலரும் பிரார்த்தித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement