• Jul 24 2025

பிரியங்கா போலவே இருக்கும் அவரின் மருமகள்... வீடியோ பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு சாதாரண தொகுப்பாளராக அறிமுகமான பிரியங்கா தேஷ்பாண்டே இன்றைக்கு சின்னக் குழந்தையில் இருந்து வயதானவர்கள் வரை அனைவரினதும் ஃபேவரைட் ஆங்கராக மாறி இருக்கின்றார்.

இவரின் கிண்டல், மற்றும் கேலி நிறைந்த பேச்சுக்களும், மற்றவர்கள் மீதான அவரின் வேடிக்கையான அணுகுமுறையும் தான் அவரை இப்படியான ஒரு உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்று சேர்ந்திருக்கின்றது. 


அதிலும் குறிப்பாக இவரும் மா.கா.பா ஆனந்தும் இணைந்து நடாத்தும் நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. அவ்வாறான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர். பாட்டு நிகழ்ச்சியையே நகைச்சுவை நிகழ்ச்சி போன்று கொண்டு நடாத்துகின்ற திறமை இவருக்கு உண்டு. 

நிகழ்ச்சிகளை பொறுத்தவரையில் குறிப்பாக தொகுப்பாளர்கள் தான் போட்டியாளர்களை கலாய்ப்பார்கள். ஆனால் ஒரு தொகுப்பாளரையே போட்டியாளர்கள் கலாய்க்கின்றார்கள் என்றால் அது நம்ம பிரியங்காவை மட்டும் தான். அந்தளவிற்கு அனைத்து நிகழ்வுகளையும் மனக்கசப்பின்றி நடாத்துகின்ற திறமை இவருக்கு உண்டு.


விஜய் டீவியின் சொத்தான பிரியங்கா அதே சேனலில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான நிகழ்ச்சியான 'பிக்பாஸ்' ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராகவும் கலந்து கொண்டார்.அத்தோடு இந்த சீசனின் டைட்டில் வின்னராக ராஜுவும், இரண்டாம் இடத்தை பிரியங்காவும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இவ்வாறாக விஜய் டீவியில் கடந்த 10 வருடங்கள் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகின்ற பிரியங்காவிற்கு ஒரு சகோதரன் உண்டு. அவருக்கு கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் தான் குழந்தை பிறந்திருந்தது. 

இந்நிலையில் அக்குழந்தையுடன் வீடியோ எடுத்து அதனை பிரியங்கா சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் "சகோதரனின் மகள் அச்சு அசலாக அத்தை போல் இருக்கின்றார்" எனக் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement