• Jul 25 2025

பிரமாண்டமாக தனது மனைவியின் 50வது பிறந்தநாளை கொண்டாடிய நெப்போலியன்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்ந்து வந்தவர் நடிகர் நெப்போலியன். சினிமாவில் ஓய்வில்லாமல் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் சினிமாவைத் தாண்டி அரசியலில் முழு கவனம் செலுத்த தொடங்கினார். அந்தவகையில் திமுக ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்திருக்கின்றார்.

பின்னர் தன் மகனுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைபாடு காரணமாக அரசியலை விட்டும் விலகிய நெப்போலியன், தற்போது குடும்பத்துடன் அமெரிக்கா சென்று அங்கு செட்டில் ஆகிவிட்டார். 

அதுமட்டுமல்லாது அமெரிக்காவில் சொந்தமாக கம்பெனி ஒன்றை நடத்தி வரும் அவர், அதேநேரத்தில் விவசாயமும் செய்து வருகிறார்.

அண்மையில் நடிகர் நெப்போலியன் அமெரிக்காவில் கட்டியுள்ள வீடு பற்றியும், திருநெல்வேலியில் அவர் கட்டிய மருத்துவமனை குறித்தும் வீடியோ வெளியாகி இருந்தது.


எனினும் இந்த நேரத்தில் நடிகர் நெப்போலியன் தனது மனைவியின் 50வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அமெரிக்காவில் தனது நண்பர்களுடனும், தன்னிடம் பணிபுரிபவர்களுடன் கொண்டாடியிருக்கிறார்.


தடபுடலாக விருந்து வைத்து, நிறைய விலையுயர்ந்த பரிசு கொடுத்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.


Advertisement

Advertisement