• Jul 24 2025

சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக, யோகி பாபுவை ட்ரெண்டாக்கி வரும் ரசிகர்கள்- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் காமெடியனாக மட்டுமின்றி கதையின் நாயகனாகவும் நடித்து கலக்கி வருகிறார். சமீபத்தில் கூட இவர் கதையின் நாயகனாக நடித்த பொம்மை நாயகி என்கிற திரைப்படம் ரிலீசாகி விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்று இருந்தது. ஷான் என்கிற புதுமுக இயக்குநர் இயக்கியிருந்த இப்படத்தை பா.இரஞ்சித் தான் தயாரித்து இருந்தார்.

 இதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார்.நடிகர் யோகிபாபு படங்களை நடிப்பதை தாண்டி கிரிக்கெட் மற்றும் ஃபுட் பால் விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்டவர். ஷூட்டிங் சமயத்தில் கூட ஓய்வு கிடைத்தால் படக்குழுவினருடன் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார் .


 இதுதவிர நண்பர்களுடன் சேர்ந்து இவர் கிரிக்கெட் விளையாடும் வீடியோக்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆவது உண்டு. கிரிக்கெட்டில் சேவாக் மாதிரி அதிரடி ஆட்டக்காரராகவே விளையாடும் யோகிபாபு சிக்சர், பவுண்டரிகளாக பறக்க விடுவார்.யோகிபாபு கிரிக்கெட் ஆடுவதை பார்த்து வியந்து போன நடிகர் விஜய், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசாக வழங்கி இருந்தார். 

ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள அந்த பேட் உடன் வீடியோ ஒன்றை எடுத்து டுவிட்டரில் பகிர்ந்த யோகிபாபு விஜய்க்கு நன்றி தெரிவித்து இருந்தார். தளபதி விஜய்யை தொடர்ந்து சமீபத்தில் ‘தல’யும் யோகிபாபுவுக்கு கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அவர் அனுப்பியது புது பேட் இல்லை. சில முறை தான் விளையாடிய பேட்டில் தன்னுடைய ஆட்டோகிராப்புடன் யோகிபாபுவுக்கு அனுப்பி வைத்திருந்தார். இது குறித்த வீடியோ ஒன்றை யோகி பாபு தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட படு வைரலாக மாறியது. இதை தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஐபில் கிரிக்கெட் போட்டியில், தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக, யோகி பாபு ரசிகர்கள், மீண்டும் இந்த வீடியோவை அதிக அளவில் ஷேர் செய்து... ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement