• Jul 24 2025

29வயது நடிகையை கர்ப்பமாக்கிய 83வயது நடிகர்... 33வயதில் முதல் குழந்தை... ஷாக்கில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அல் பசீனோ. இவர் 1972-ஆம் ஆண்டு வெளியான 'தி காட் ஃபாதர்' என்ற படத்தில் மார்லன் பிராண்டோவின் மகனாக நடித்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தார்.

இதனைத் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து வந்த இவரின் குடும்ப வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் 1988-ஆம் ஆண்டு ஜன் டரன்ட் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் அல் பசீனோ. ஆனாலும் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக ஒரே வருடத்தில் இருவரும் பிரிந்து விட்டனர். 


இதனையடுத்து பின்னர் 1997-ஆம் ஆண்டு பிவர்லி டி ஏஞ்சலோ எனும் ஹாலிவுட் நடிகையை திருமணம் செய்துக் கொண்டார். இந்த வாழ்க்கையும் நிலைக்கவில்லை. 2003-ஆம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்து பிரிந்தார். 

இதனைத் தொடர்ந்து 2008-ஆம் ஆண்டு லூசிலா போலக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் குழந்தைகள் பெற்றுக் கொண்ட நிலையில் 2018-இல் அவரையும் பிரிந்து விட்டார். இந்நிலையில் தற்போது, 29 வயதே ஆன நடிகை நூர் அல்ஃபலாவுடன் இல்லற வாழ்க்கையை நடத்தி வந்த நிலையில், அவரையும் நடிகர் அல் பசீனோ கர்ப்பமாக்கி இருக்கின்றார்.


மேலும் அல் பசீனோவின் முதல் குழந்தைக்கு 33 வயதாகின்ற இந்த நேரத்தில், இவரின் 4-ஆவது குழந்தை 4வது காதலியின் வயிற்றில் வளர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக 83 வயதான நடிகர் நடிகர் அல் பசீனோவிற்கும், 29 வயதான நடிகை நூர் அல்ஃபலாவிற்கும் குழந்தை பிறக்கவுள்ள இந்த விடயமானது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Advertisement

Advertisement