• Jul 25 2025

பூவா, தலயா போட்டு திரையரங்கை பிடித்த ரசிகர்கள்..யார் வெற்றி பெற்றது தெரியுமா..வெளிவந்த வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பல வருடங்களுக்கு பின் விஜய் மற்றும் அஜித் படங்கள் ஒரே நாளில் பிரமாண்டமாக  வெளியாகிறது. இதை ஒரு திருவிழா போல் அவர்களின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

நாளை வெளியாகவிருக்கும் வாரிசு மற்றும் துணிவு படத்திற்காக மிக ஆவலுடன் இரு தரப்பினரும் காத்துகொண்டு இருக்கிறார்கள். மேலும் இந்த நேரத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று திரையரங்கில் நடைபெற்றுள்ளது.

மூன்று திரைகள் கொண்ட பிரபல திரையரங்கம் ஒன்றில் ஒரு திரையில் துணிவும், மற்றொரு திரையில் வாரிசும் வெளியாகின்றது.

மீதமுள்ள மூன்றாவது திரையில் எந்த ஒரு படம் வேண்டும் என்பதை விஜய், அஜித் ரசிகர்கள் பூவா, தலயா போட்டு முடிவெடுத்துள்ளார்கள்.

மேலும் இதில் அஜித்தின் துணிவு வெற்றிபெற்றுள்ளது. இதனால் மற்றொரு தரப்பினர் சோகமடைந்துள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..




Advertisement

Advertisement