• Jul 24 2025

விஜய்க்கு கற்பூரம் காட்டி பூஜை செய்த ரசிகர்கள்- இசை வெளியீட்டு விழாவில் நடந்த தரமான சம்பவம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படம், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் படுதூளாக நடந்து வருகிறது.

ஏற்கனவே வாரிசு படத்தில், இடம்பெற்ற மூன்று சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவற்றில் முதல் பாடலான ரஞ்சிதமே... பாடல் காதல் பாடலாகவும், இரண்டாவது பாடலான தீ தளபதி... பாடல் மாஸ் பாடலாகவும், மூன்றாவது பாடலான Soul of varisu அம்மா சென்டிமென்ட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பாடல் ஆகவும் இருந்தது.


மேலும் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வெளியே டிக்கெட் இல்லாமல் எக்கச்சக்க ரசிகர்கள் குவிந்து இருப்பதால் போலீசாருக்கும் அவர்களுக்கும் நடுவில் கடும் தள்ளுமுள்ளு நடந்துகொண்டிருக்கிறது.

இதற்கிடையில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். மேலும் அரங்கத்தின் உள்ளே ரசிகர்கள் டார்ச் அடித்து கொண்டாடும் வீடியோவும் தற்போது வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது.மேலும் வெளியே விஜய் ரசிகர்கள் சிலர் விஜய்யை இந்து கடவுள் விஷ்ணு போன்ற தோற்றத்தில் பேனர் வைத்து அவருக்கு கற்பூரம் காட்டி பூஜை செய்து இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது



Advertisement

Advertisement