• Jul 25 2025

மீண்டும் புதிய சிக்கலில் சிக்கிய மீராமிதுன்- பணமோசடி வழக்கை ரத்து செய்ய மறுப்புத் தெரிவித்த உயர்நீதிமன்றம்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் மாடல் அழகியாக அறிமுகமாகியவர் தான் மீரா மிதுன். இவர் இது தவிர சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார். இருப்பினும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு கொண்டதன் மூலமே மிகவும் பிரபல்யமானார்.

தொடர்ந்து பல மோசடி சர்ச்சைகளிலும் காதல் சர்ச்சைகளிலும் சிக்கி வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் கடந்த 2018-ம் ஆண்டு தனியார் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட மிஸ் சென்னை போட்டியில் தனியார் நிறுவனத்தை பிரபலப்படுத்த ரூபாய் 50 ஆயிரம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக  இவர் மீது குற்றச்சாட்டப்பட்டது.


இந்த வழக்கில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மீரா மிதுனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மீரா மிதுன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி, காவல்துறை அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது.


மேலும் வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.மீரா மிதுன் தாழ்த்தப்பட்டோர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக புகார் அளிக்கப்பட்டு வழக்கு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement