• Jul 25 2025

கடைசியில் வீட்டை விற்று தெருவிற்கே வந்து விட்டோம்.. கண்ணீருடன் கூறிய அமீர்கான்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்தி சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் அமீர்கான். இவர் நடிப்பில் உருவான படங்களோ ஏராளம். இருப்பினும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லால்சிங் சத்தா' படம் படுதோல்வி அடைந்தது. 

இதனைத் தொடர்ந்து சினிமாவை விட்டு விலகி இருக்கப் போவதாக அறிவித்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு முதல் தடவையாக அவர் அளித்துள்ள பேட்டியில் சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட பண கஷ்டங்களை பகிர்ந்தார்.


அதில் அமீர்கான் கூறும்போது "அந்த நாட்கள் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. எனது தந்தை தாகிர் உசேன் 'ஸ ராக்கெட்' என்ற படத்தை தயாரித்தார். அதில் ஹீரோ, ஹீரோயின் ஆக ஜிதேந்திரா நடிகை ரேகா மற்றும் காதர் கான் போன்ற பெரும் நடிகர்களை ஒப்பந்தம் செய்தார். 

இருப்பினும் என்னுடைய தந்தை பிரபல தயாரிப்பாளர் இல்லை என்பதால் அவர்கள் சரியாக கால்ஷீட் கொடுக்க முடியாமல் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போனது. மேலும் அந்தப் படம் முடிய எட்டு ஆண்டுகளுக்கு மேல் ஆனது" என கூறி இருக்கின்றார்.


அத்தோடு "அந்த சமயத்தில் எங்கள் குடும்ப நிலை மிகவும் மோசமானது. சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டோம். கடைசியில் வீட்டை விட்டு தெருவிற்கு வந்து விட்டோம். படம் எடுக்க கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு தொல்லை கொடுத்தனர். அவர்களிடம் என் அப்பா கெஞ்சுவார். அப்போது நான் பத்து வயது சிறுவன்" எனக் கண்ணீர் மல்க கூறி இருக்கின்றார்.

அதுமட்டுமல்லாது "அதனால்தான் நான் நடிக்க வந்த பிறகு எந்த ஒரு தயாரிப்பாளர்களுக்கும் கஷ்டம் கொடுக்காமல் இருக்கிறேன்" எனவும் கூறி இருக்கின்றார்.

Advertisement

Advertisement