• Jul 24 2025

முதல் குடும்ப போட்டோஷூட் ; மைனா நந்தினி பகிர்ந்த அழகிய புகைப்படங்கள்- லைக்ஸினை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை மைனா நந்தினி, அடுத்தடுத்த சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள், சினிமா என பிசியாக செயல்பட்டு வருகிறார்.விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் மைனா நந்தினி.

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று ஏராளமான ரசிகர்களை கவர்ந்த மைனா நந்தினி, இறுதிச்சுற்றுக்கு முன்பே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

நடிகை மைனா நந்தினி, விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். இந்தத் தொடரில் இவர் ஏற்று நடித்த, மைனா என்ற கேரக்டர் ரசிகர்கள் மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொண்டதில், இவரது பெயருக்கு முன்பும் அந்தப் பெயர் இணைந்துக் கொண்டது. சின்னத்திரை சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள், பிக்பாஸ் என அடுத்தடுத்த ஷோக்களில் இவரை தனியாகவும் தன்னுடைய கணவருடனும் காண முடிகிறது.

தொடர்ந்து ஜீ தமிழ் நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தார். இதையடுத்து மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சிகளான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, கலக்கப் போவது யாரு, பிக்பாஸ் என அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்று சிறப்பான செயல்பாட்டை அளித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் 104 நாட்கள் இவர் பிக்பாஸ் வீட்டில் தாக்கு பிடித்தார். இவரது அடுத்ததடுத்த வீடியோக்கள், ரீல்ஸ், சுற்றுலா புகைப்படங்கள் ஆகியன ரசிகர்களால் கவரப்பட்டு வருகின்றன.

இதனிடையே, முதல் முறையாக தன்னுடைய குடும்பத்தின் போட்டோஷுட்டை எடுத்துள்ளதாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய கணவர் மற்றும் மகனுடன் இணைந்து ஸ்டைலிஷ் லுக்கில் தான் எடுத்துக் கொண்டுள்ள பேமிலி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு ,லைக்ஸினை அள்ளிக்குவித்து வருகிறார்கள்.



Advertisement

Advertisement