• Jul 26 2025

ஆஸ்கர் விருதுக்காக ரூ. 80 கோடி செலவு செய்தாரா ஆர்.ஆர்.ஆர். இயக்குநர் எஸ். ராஜமவுலி? கொந்தளித்த ரசிகர்கள்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 ஆஸ்கர் விருது பெறுவதற்காக ஆர்.ஆர்.ஆர். பட இயக்குநர் ராஜமவுலி ரூ. 80 கோடி செலவு செய்திருப்பதாக இயக்குநர் தம்மாரெட்டி பரத்வாஜா கூறியுள்ளார்.

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரம், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்டார் நடித்த ஆர்.ஆர்.ஆர். படத்தில் வந்த நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.அத்தோடு  அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருது நாட்டு நாட்டுவுக்கு கிடைத்திருக்கிறது.

சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்திய பட பாடல் என்கிற பெருமையை பெற்றிருக்கிறது நாட்டு நாட்டு. இவ்வாறுஇருக்கையில் இயக்குநர் தம்மாரெட்டி பரத்வாஜா கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. ஆஸ்கர் விருது பெற ராஜமவுலி ரூ. 80 கோடி செலவு செய்திருக்கிறார். ரூ. 600 கோடி செலவில் படம் எடுத்து அதை ஆஸ்கருக்காக விளம்பரம் செய்ய ரூ. 80 கோடி செலவு செய்திருக்கிறார்கள்.அத்தோடு  ஆஸ்கர் விளம்பர செலவில் மட்டுமே 8 முதல் 10 படங்களை எடுக்கலாம் என்றார்.


ஆர்.ஆர். ஆர். படம் பற்றி செய்தியாளர்களிடம் தம்மாரெட்டி கூறியதை கேட்ட இயக்குநர் ராகவேந்திர ராவ் ட்விட்டரில்  தெரிவித்திருப்பதாவது, உலக அரங்கில் முதல் முறையாக கிடைத்திருக்கும் வெற்றியை நினைத்து தெலுங்கு சினிமா, நடிகர்கள், இயக்குநர்கள் பெருமைப்பட வேண்டும். அத்தோடு ஆர்.ஆர்.ஆர். குழு ரூ. 80 கோடி செலவு செய்ததற்கான ஆதாரம் உங்களிடம் இருக்கிறதா?. நம்மிடம் இருந்து பணம் பெற்றதற்காக உலக பிரபலமான இயக்குநர்களான ஜேம்ஸ் காமரூன், ஸ்பீல்பர்க் ஆகியோர் ஆர்.ஆர்.ஆர். படத்தை பாராட்டினார்கள் என நினைக்கிறீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்தோடு திறமைக்காக தான் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கொடுத்திருக்கிறார்கள். அதை பார்த்து பொறாமையில் பேசுகிறார் தம்மாரெட்டி. அதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. வயித்தெரிச்சல் இருக்கத் தானே செய்யும். தம்மாரெட்டியை பொருட்படுத்த வேண்டாம் என்கிறார்கள் தெலுங்கு சினிமா ரசிகர்கள்.

ரூ. 80 அல்ல ரூ. 83 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் விருது விளம்பரங்களுக்காக ரூ. 83 கோடி செலவு செய்திருக்கிறார்கள். அதில் பெரும் தொகையை ராஜமவுலி தான் கொடுத்திருக்கிறார். அவரின் வங்கிக் கணக்கில் இருந்து தான் பணம் சென்றிருக்கிறது. ஜப்பான் மற்றும் ரஷ்யாவில் ஆர்.ஆர்.ஆர். படம் செய்த வசூலில் இருந்து சிறு தொகையை விளம்பரத்திற்காக எடுத்தார்கள் என அண்மையில் தகவல் வெளியானது. ஆனால் அது உறுதி செய்யப்படாத தகவல் ஆகும்.


Advertisement

Advertisement