• Jul 25 2025

உலகத்தில் முதல் முறையாக ஐயப்பன் மாலை அணிந்து- காலில் செருப்பு அணியாது- ஆஸ்கர் விருது விழாவிற்கு செல்லும் பிரபலம்

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ராஜமவுலி இயக்கத்தில், ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் கடந்தாண்டு மார்ச் மாதம் ரிலீசாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்'. அதாவது பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆன இந்தப் படமானது பாக்ஸ் ஆபிஸில் ரூ.1100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து இருக்கின்றது.

மேலும் இப்படமானது வெளியாகி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், தற்போதும் அதற்கான மவுசு குறையவில்லை. அந்தளவிற்கு உலகளவில் நடந்து வரும் விருது விழாக்களில் ஆர்.ஆர்.ஆர். படத்துக்குத் தான் அதிகளவு விருதுகள் குவிந்து வருகின்றன. 


அந்தவகையில் கடந்த மாதம் இப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான கோல்டன் குளோப் விருது ஆனது இசையமைப்பாளர் கீரவாணிக்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இப்படத்திற்கு ஆஸ்கர் விருதும் கிடைக்க இருப்பதாக கூறப்படுகின்றது.


அதில் நாட்டு நாட்டு பாடல் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளதால், அடுத்தமாதம் நடைபெற உள்ள ஆஸ்கர் விருது விழாவில் அப்பாடலுக்கு விருது கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருதி ஆர்.ஆர்.ஆர். படத்தின் நட்சத்திரங்கள் பலரும் அமெரிக்காவுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர்.


அந்தவகையில் ஏற்கனவே கீரவாணி அமெரிக்காவில் தங்கியுள்ள நிலையில், தற்போது ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாயகன் ராம்சரணும் இன்றைய தினம் அமெரிக்காவுக்கு கிளம்பி சென்றுள்ளார். இந்நிலையில் அவர் விமான நிலையம் வந்த போது எடுத்த புகைப்படங்கள்  சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


மேலும் தற்போது ஐயப்பனுக்கு மாலை போட்டுள்ள ராம்சரண், கருப்பு நிற ஆடை, கையில் துண்டுடன் காலில் செருப்பு எதுவும் அணியாமல் விமான நிலையத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது ஐயப்பன் மாலை போட்டுக்கிட்டு ஆஸ்கர் விருது விழாவிற்கு செல்கின்ற முதல் பிரபலம் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement