• Jul 26 2025

தொடர்ந்து இரண்டு வாரம் எலிமினேஷன் டவுண்டிலிருந்து எஸ்க்கேப்பான பிரபலம்- சூப்பர் குக்காக இருக்கிறாங்களே

stella / 2 years ago

Advertisement

Listen News!


குக்வித் கோமாளி நிகழச்சியின் தற்பொழுது 4 வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் ஷெரின், விசித்ரா, ஸ்ருஷ்டி, ராஜ் அய்யப்பா, மைம் கோபி என புகழ்பெற்ற நடிகர், நடிகைகள் ஏராளமானோர் கலந்துகொண்டு உள்ளனர். குறிப்பாக கடந்த சீசன் வரை கோமாளியாக இருந்து வந்த சிவாங்கி, இந்த சீசனில் குக் ஆக களமிறங்கி கலக்கி வருகிறார்.

 வழக்கம்போல் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகியோர் தான் நடுவர்களாக இருந்து வருகின்றனர். இந்த சீசனில் இதுவரை 8 வாரங்கள் முடிந்துள்ளன. அதில் இதுவரை கிஷோர் காளையன் ராஜ் அய்யப்பா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.


கடந்த வாரம் இறுதியில் ராஜ் அய்யப்பா மற்றும் ஷெரின் ஆகியோர் தான் டேஞ்சர் ஜோனில் இருந்தனர். அவர்கள் இருவருக்கும் இடையே கடைசியில் டாஸ்க் வைக்கப்பட்டது. இதில் ஷெரின் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதால், ராஜ் அய்யப்பா இந்த போட்டியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார்.


 ராஜ் அய்யப்பா வலிமை படத்தில் நடிகர் அஜித்துக்கு தம்பியாக நடித்தவர் ஆவார். குக் வித் கோமாளி சீசன் 4-ல் இதுவரை எலிமினேட் ஆகி உள்ள 3 பேருமே ஆண்கள் தான் என்பதும் முக்கியமாகும். இந்த நிலையில் இரண்டாவது முறையாக இந்த வாரமும் இம்யூனிட்டி டாஸ்க்கில் ஆண்ட்ரின் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement