• Jul 26 2025

முதன் முறையாக தனது அம்மாவுடன்.. சூப்பர் சிங்கர் தினேஷ் விமானப் பயணம் .. மனதை உருக்கும் வீடியோ இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஒரு ஹிட் நிகழ்ச்சி என்றால் அது 'சூப்பர் சிங்கர்' தான். சினிமாவில் பாடகர்களாக வேண்டும் என்ற பலரது கனவை நனவாக்கிய மேடையாக சூப்பர் சிங்கர் மேடை அமைந்திருக்கின்றது. 


இந்நிகழ்ச்சியானது யூனியர், சீனியர் என பல சீசன்கள் ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் தற்போது சீனியர்களுக்கான 9-ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இறுதிக்கட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கும் இந்த சீசனில் 10 பைனலிஸ்ட் தேர்வாகி இருக்கின்றனர்.


அவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான முறையில் பல போட்டிகள் நடந்து வருகிறது. அந்தவகையில் கடந்த வார நிகழ்ச்சியில் தினேஷ் அவரது அம்மாவுடன் விமான பயணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளதாக சூப்பர் சிங்கர் நடுவர்கள் கூறியிருந்தார்கள்.


அதனைத் தொடர்ந்து அதனைத்  தினேஷ் மற்றும் அவரது அம்மா இருவரும் முதன்முறையாக விமானத்தில் பயணம் செய்துள்ளனர். அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஆனது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement