• Jul 25 2025

நான் செய்த தவறுகளை மன்னியுங்கள் - கண்ணீர் மல்க பேசிய மும்தாஜ்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநர் டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான மோனிஷா என் மோனலிசா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக  அறிமுகமானவர் மும்தாஜ். இதை தொடர்ந்து இவர் பலர் படங்களில் நடித்திருந்தாலும், ரசிகர்கள் பலரையும் திரும்பி பார்க்க வைத்தது, இவர் கவர்ச்சி நாயகியாக நடித்த குஷி, ஸ்டார், போன்ற படங்கள் என்று தான் கூற வேண்டும்.

இதன் பின்னர் ரோஜாக்கூட்டம், ராஜாதி ராஜா திரைப்படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் மார்க்கெட் இழந்த மும்தாஜ் முழுவதுமாக திரையுலகில் இருந்து விலகினார்.

 அத்தோடு  ரீ- என்ட்ரி கொடுக்கும் முயற்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு, திறமையாக தன்னுடைய விளையாட்டை விளையாடினாலும், ஓவர் ஸ்டிரிக்ட் ஆபிஸராக இருந்ததால், குறைவான வாக்குகளுடன் வெளியேறி இருந்தார்.



இவ்வாறுஇருக்கையில்  இஸ்லாமிய புனித தலமான மெக்காவிற்கு சென்றுள்ளதை வீடியோவாக பதிவிட்டுள்ளார் மும்தாஜ். அந்த வீடியோவில் அவர், " இந்த பூமியில் பிடித்த இடமான மெக்காவிற்கு வந்தது நான் என் வாழ் நாள் பாக்கியமாக நினைக்கிறேன். என்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை.

நான் அனைத்து மக்களுக்காகவும் பிராத்தனை செய்கிறேன். மேலும், நாங்கள் செய்யும் குற்றங்களை மன்னியுங்கள், எங்களுக்கு இன்பமான வாழ்க்கையை தாருங்கள். எங்கள் பாவங்களை மன்னியும்" என கண்ணீர் மல்க பிராத்தனை செய்துள்ளார்.தற்போது இந்த வீடியோ வைரலாகிறது.





Advertisement

Advertisement