• Jul 26 2025

ஆடைச்சர்ச்சையில் கைது...திடீரென பரபரப்பு விளக்கம் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 பிக் பாஸ் ஓடிடி பிரபலம் உர்ஃபி ஜவேத் துபாயில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அது தொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கம்  பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

எல்லை மீறிய ஆபாச உடைகளை அணிந்து கொண்டு இன்ஸ்டாகிராமில் வீடியோ போடுவதும், தியேட்டர், சினிமா நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு வருவதுமாக பாலிவுட் கவர்ச்சி நடிகைகளுக்கே டஃப் கொடுத்து வந்தார்.

டிவி நடிகையான உர்ஃபி ஜாவேத் பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது போல்டான பேச்சாலும், உடையாலும் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தார்.எனினும்  தற்போது சன்னி லியோனின் ஸ்ப்லிட்ஸ் வில்லா எனும் ரியாலிட்டி ஷோவில் நடித்து வரும் இவர் சோஷியல் மீடியாவில் எக்ஸ்ட்ரா கிளாமர் உடைகளுடன் வீடியோக்கள் வெளியிட்டு பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.


வெறும் ஸ்மார்ட் போன்களை தொங்க விட்டப்படியும், இரு மார்பகங்களில் மட்டுமே சின்னதாக ஆடை அணிந்தும், டிரெஸ்ஸே போடாமல் ஒயின் கிளாஸ்களை கொண்டு முன்னழகை மறைத்தும் பல விதமான உள்ளாடைகளை அறிமுகப்படுத்தி வந்த உர்ஃபி ஜாவேத்தின் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் கணக்கு இஷ்டத்துக்கு அதிகரித்து வருகின்றன.

அத்தோடு சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எழுத்தாளர் சேத்தன் பகத் உர்ஃபி ஜாவேத் இந்திய இளைஞர்களை மனதளவில் கெடுத்து வருகிறார் என பேசியிருந்தார். மேலும், நடன இயக்குநரும் இயக்குநருமான ஃபரா கான் ஒரு நிகழ்ச்சியில் படு மோசமாக ஆடை அணிந்து வந்த உர்ஃபி ஜாவேத்தை கழுவி ஊற்றியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

உர்ஃபி ஜாவேத்துக்கு பெயர் பிரச்சனை காரணமாக பாஸ்போர்ட் வழங்குவதில் சிக்கல் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் அந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது. உடனடியாக laryngitis எனப்படும் குரல்வளை அழற்சி நோய்க்காக சிகிச்சை எடுக்க துபாய் சென்ற இடத்தில் உர்ஃபி ஜாவேத்தை துபாய் போலீஸார் கைது செய்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின. மேலும் அதன் உண்மை குறித்து தற்போது அவரே ஓபனாக விளக்கம் கொடுத்துள்ளார்.


அத்தோடு என்னோட டிரெஸ் பிரச்சனையே இல்லை. நாங்க ஷூட்டிங் பண்ண இடத்துல குறிப்பிட்ட நேரத்தை தாண்டி ஷூட்டிங் நடத்தியதால் போலீஸார் விசாரணை நடத்தினர்.அத்தோடு  யாரும் என்னை கைது செய்யவில்லை. வெளியானது மொத்தமும் வதந்தி தான். இன்னைக்கு மீண்டும் அதே இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஷூட்டிங் செய்து வருகிறோம் என பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் உர்ஃபி ஜாவேத்.

Advertisement

Advertisement