• Sep 13 2025

நல்ல வேளை கதிர் பார்க்கல... காதல் பாட்டிற்கு டான்ஸ் ஆடும் 'எதிர்நீச்சல்' நந்தினி... கமெண்டுகளைக் குவிக்கும் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் செம ஹிட்டாக ‘எதிர்நீச்சல்’ என்னும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. 


பெண் அடிமைத்தனம், ஆணாதிக்கம் தொடர்பான கருத்துகளை பேசி வருவதால் நாளுக்கு நாள் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகமாகி கொண்டு வருகின்றனர். இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகர்கள் அனைவருமே ஏதோ ஓர் வகையில் ரசிகர்களை கவர்ந்துள்ளனர்.

இந்த சீரியலில் உள்ள அத்தகைய ஒரு அருமையான கதாபாத்திரம் தான் நந்தினி. இந்த கதாபாத்திரத்தில் நடிகை ஹரிப்பிரியா நடித்து வருகின்றார். இவருக்கு நிறையவே ரசிகர் பட்டாளம் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம் தான்.


இந்நிலையில் ஹரிப்ரியா தற்போது "சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது..." என்ற பாடலிற்கு பரத நாட்டியம் ஆடி அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் "நல்ல வேளை கதிர் பார்க்கல, பார்த்தால் என்ன ஆகும்" எனக் கிண்டலாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.  


Advertisement

Advertisement