• Jul 23 2025

''நம்ம கால்ல விழறாரா பார்ப்போம்''.. மீண்டும் ரஜினியை வம்பிழுத்த ப்ளூ சட்டை ...!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

 நடிகர் ரஜினியின் ஜெயிலர் படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்துள்ளது. 500 கோடி ரூபாய்களை இந்தப் படத்தின் வசூல் கடந்துள்ளதாக தயாரிப்பு தரப்பு அப்டேட் தெரிவித்துள்ளது.

இந்தப் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே தன்னுடைய இமயமலை பயணத்தை மேற்கொண்டார் ரஜினிகாந்த். சில நாட்கள் வட இந்தியாவிலும் அவருடைய பயணம் தொடர்ந்தது.


இந்தப் பயணத்தின்போது உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் ரஜினி விழுந்ததும் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.

அந்தவகையில் சினிமா விமர்சகரும் இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன். ரஜினியின் காக்கா, பருந்துக்கதையை ட்ரோல் செய்ய ஆரம்பித்து அவரது வட இந்திய பயணம், உபி முதல்வர் காலில் ரஜினி விழுந்தது வரை தொடர் விமர்சனங்களை அவர் மேற்கொண்டு வருகிறார்.


இந்நிலையில் தற்போது சாதுக்கள் காத்திருப்பதாக புகைப்படத்துடன் இந்த வழியாக ரஜினி வர்றாராம், நம்ம கால்ல விழாறாரா பார்ப்போம் என்ற பதிவையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ப்ளூ சட்டை மாறன் பகிர்ந்து மீண்டும் ரஜினியை வம்பிழுத்துள்ளார்.



Advertisement

Advertisement