• Jul 25 2025

மஹா சிவராத்திரிக்கு சமந்தா முதல் மகேஷ் பாபு வரை, பிரபலங்களின் வாழ்த்து..வைரல் பதிவுகள் இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

மஹா சிவராத்திரி சிவபெருமானின் உகந்த நாளான இன்று, நாடு முழுவதும் மஹா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. மக்கள் இந்த நாளில் சிவன் பெயரில் பூஜைகள், மந்திரங்கள் மற்றும் விரதம் என இன்று இரவு, பலர் இரவில் தூங்குவது கூட இல்லை, தியானம் மற்றும் சிவனை வழிபடுவது வழக்கம்.

இந்த மங்களகரமான நாளில், தென்னிந்தியத் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் தங்கள் ரசிகர்களுக்கும் சக நண்பர்களுக்கும் பக்தி வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டு வருகிறார்கள். அந்த வகையில், நடிகை சமந்தா முதல் நடிகர் மகேஷ் பாபு என பல பிரபலங்கள் தங்கள் சமூக வலைத்தள பக்கத்தில், புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டு வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.

அதன்படி, நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் தனது வரவிருக்கும் புராண படமான சாகுந்தலம் படத்தில் அவர் பிரார்த்தனையில் ஈடுபடும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து வாழ்த்தினை தெரிவித்துள்ளார். மேலும் அதில், “ஓம் நம சிவாய! இறைவனின் ஆசீர்வாதம். சிவன் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் இருக்கட்டும்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.


அந்த வகையில், மகா சிவராத்திரி தினத்தன்று சமந்தா, தனது சக நண்பர்களுடன் கொண்டாடுவதற்காக கோயம்புத்தூருக்கு ஆண்டுதோறும் வருகை தருவது வழக்கம். 

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவும் தனது, சமூக வலைதள பக்கத்தில், ரசிகர்களுக்கு சிவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்தார். அந்த பதிவில், “உங்கள் அனைவருக்கும் இனிய மகாசிவராத்திரி வாழ்த்துக்கள்! ஒளி எப்போதும் உங்களை வழிநடத்தட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.









Advertisement

Advertisement