• Jul 24 2025

முதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்த ரன்பீர் கபூர் - அலியா பட்... வைரலாகும் புகைப்படம்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகின் நட்சத்திர காதல் ஜோடியான ரன்பீர் கபூர் - அலியா பட் ஜோடி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், மிகப்பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். 

திருமணமான ஒரே மாதத்தில் கர்ப்பமாக இருக்கும் தகவலை ஆலியா பட் பகிர்ந்த நிலையில், திருமணத்திற்கு முன்பே அவர் கர்ப்பமாக இருந்ததாக சில விமர்சனங்களும் எழுந்தன.

இதை தொடர்ந்து, இந்த நட்சத்திர ஜோடிகளுக்கு... கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அழகிய பெண் குழந்தை பிறந்த நிலையில், அவருக்கு ராஹா என பெயர் வைத்தனர். 

தற்போது ஆலியா பட் திரையுலகில் இருந்து விலகி தன்னுடைய குழந்தையை கவனித்து கொண்டு தாய்மை என்னும் சுகத்தை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில் ஆலியா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். Ed-a-Mamma என குழந்தை அணியும் ஆடைகளை விளம்பரப்படுத்திய அவர், வெளியிட்டுள்ள குழந்தையின் புகைப்படம் ஆலியாவின் குழந்தை தான் என ரசிகர்கள் கூறி வருவதோடு, இந்த புகைப்படத்தையும் வைரலாக்கி வருகிறார்கள். 

ஆனால் இது ஆலியாவின் குழந்தை தான் என இதுவரை அவரின் தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாக வில்லை. ரசிகர்களின் இந்த கேள்விக்கு ஆலியா வாய் திறப்பாரா? என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Advertisement

Advertisement