• Jul 25 2025

தற்கொலை செய்த சீரியல் நடிகை துனிஷாவின் இறுதி ஊர்வலப் புகைப்படங்கள்- கதறி அழும் பிரபலங்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


பாலிவூட் சின்னத்திரை சீரியல்களில் நடித்துது பிரபல்யமானவர் தான் நடிகை துனிஷா சர்மா. இவர் மகாராஷ்டிராவில் தொலைக்காட்சி தொடரின் ஷூட்டிங் ஸ்பாட்டின் மேக்கப் அறையில் வைத்து துனிஷா சர்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


இதையடுத்து, துனிஷா சர்மாவின் உடல் ஜேஜே மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை நடந்தது. துனிஷா சர்மாவும், சக நடிகருமான சீசன் கானும் காதலித்து வந்துள்ளது. இருவரும் ஒன்றாகவும் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


இந்த நிலையில் தான் சீசன் கான் தனது காதலை முறித்துக் கொண்டுள்ளார். இது மனதளவில் துனிஷா சர்மாவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. துனிஷா சர்மாவின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் சீசன் முகமது கான் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


சீசன் முகமது கானுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. காதல் முறிவை தாங்கிக் கொள்ளாத துனிஷா சர்மா இது போன்ற ஒரு முடிவை எடுத்துள்ளார். அவரது உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இன்று தகனம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.




Advertisement

Advertisement