• Jul 25 2025

ராஷ்மிகா உடன் நடிக்க மறுத்த காந்தாரா ஹீரோ? இந்த பிரச்சனையால் தானா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

காந்தாரா படத்தின் மூலமாக தற்போது புகழின் உச்சத்திற்கே சென்றிருக்கிறார் ரிஷப் ஷெட்டி. மேலும் அவர் இயக்கி நடித்த இந்த படம் வெறும் 15 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்தாலும் தற்போது 400 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலித்து சாதனை படைத்து உள்ள விடயம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 இந்த படம் நாளை ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் நல்ல வரவேற்பு கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.


இவ்வாறுஇருக்கையில்  சமீபத்தில் ஒரு தெலுங்கு இணையதளத்திற்கு ரிஷப் ஷெட்டி அளித்திருக்கும் பேட்டியில் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. 'ராஷ்மிகா, சமந்தா, கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி.. இந்த நடிகைகளில் யாருடன் நடிக்க விரும்புகிறீர்கள்?' என கேட்கப்பட்டது.

அதற்கு பதில் சொன்ன அவர் "நான் ஸ்கிரிப்ட் முடிவான பின்னர்  தான் நடிகர்களை தேர்வு செய்வேன். அது மட்டுமின்றி நான் புதுமுகங்கள் உடன் பணியாற்ற தான் விரும்புவேன். அவர்களுக்கு தான் எந்த பிரச்னையும் இருக்காது. மேலும் இந்த நடிகைகளை எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் சாய் பல்லவி, சமந்தா ஆகியோரின் நாடிப்பு எனக்கு பிடிக்கும்" என கூறி இருக்கிறார்.


ராஷ்மிகா மந்தனாவை அறிமுகப்படுத்திய இயக்குநர் ரிஷப் ஷெட்டி தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போதைய பேட்டியில் அவரை பிடிக்காது என ஓப்பனாக கூறி இருப்பது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

அத்தோடு ராஷ்மிகாவின் முன்னாள் காதலர் இவர் நெருங்கிய நண்பர் என்பதும் கூடுதல் தகவல். சமீபத்தில் ராஷ்மிகா அளித்த பேட்டி ஒன்றில் தனது முதல் படம் பற்றி பேசிய விஷய்ம் தான் ரிஷப் ஷெட்டிக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement